89. அருள்மிகு இமையவரப்பன் கோயில்
மூலவர் இமையவரப்பன்
தாயார் செங்கமலவல்லி
திருக்கோலம் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் சங்க தீர்த்தம், சிற்றாறு
விமானம் ஜகஜ்ஜோதி விமானம்
மங்களாசாசனம் நம்மாழ்வார்
இருப்பிடம் திருச்செங்குன்றூர், கேரளா
வழிகாட்டி தற்போது 'செங்கனூர்' என்று அழைக்கப்படுகிறது. எர்ணாகுளத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் இரயில் பாதையில் செங்கனூர் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே 1.5 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
தலச்சிறப்பு

Tiruchenkundrur Gopuram Tiruchenkundrur Moolavarஇக்கோயில் 'தருமர் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. பாரதப் போரில் தருமர் தமது குருவான துரோணாசாரியாரிடம், அவரது மகன் அசுவத்தாமன் இறந்து விட்டதாகப் பொய் சொல்ல, அது துரோணருக்கு முடிவாகவும் அமைந்தது. தான் கூறிய பொய்யே அவரது மரணத்திற்குக் காரணம் என்று வருந்திய தர்மபுத்திரர் இத்தலத்திற்கு வந்து பகவானுக்கு ஆலயம் எழுப்பி, திருச்சிற்றாற்றில் ஸ்நானம் செய்து பூஜை செய்தார். எனவே இப்பெயர் பெற்றது.

ஒருசமயம் தேவர்கள் இத்தலத்தில் கூடி தவம் செய்தபோது, மகாவிஷ்ணு காட்சி தந்து ஒரு தந்தையைப் போல ஆசி கூறியதால் மூலவருக்கு 'இமையவர் அப்பன்' என்ற பெயர் ஏற்பட்டது.

மூலவர் இமையவரப்பன் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். இந்த மூர்த்தியை பஞ்ச பாண்டவர்களுள் மூத்தவரான தருமபுத்திரர் ஜீர்ணோத்தாரணம் செய்ததால் 'தருமர் பிரதிஷ்டை' என்று அழைக்கப்படுகிறது. தாயாருக்கு செங்கமலவல்லி என்பது திருநாமம். ருத்ரனுக்கு (சிவன்) பகவான் பிரத்யக்ஷம்.

நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com